நீங்க உண்மையான சந்தோஷத்தை பெற வேண்டுமா? இயேசுவை பின்பற்றுங்க சகோதர சகோதரிகளே



அன்பு சகோதரனே சகோதரியே!

நீ தேடும் சந்தோஷமான வாழ்வை இயேசுவால்  உனக்கு தர முடியும் என்பதை நீ விசுவாசிக்கிறாயா? 

நான் இருக்கும் நெருக்கடியான சூழலில் உதவி செய்ய யாரும் இல்லை என்று நெருக்கடியில் சிக்கி உழன்றிருக்கிறாயா? நீ இயேசுவை விசுவாசி நீ சந்தோஷமடைவாய்.

"மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும், நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்". (யோவான் 16:20) 

இது இயேசு தன் சீடர்களுக்கு கூறிய வார்த்தை. இது எப்படி சாத்தியம் என்று கேள்வி எழுப்புகிறாயா தேவ பிள்ளையே!. இயேசு கிறிஸ்து மரித்து அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாள் உயிருடன் எழுந்தார். விண்ணுலகிற்கு ஏறி பிதாவின் வலது புறத்தில் வீற்றிருக்கிறார். 

இது அவர் அனுபவித்த பாடுகளால் அவருக்கு பிதா கொடுத்த மகிமையான இடம். உலகில் வாழ்ந்த போது அவருக்கு அனேகம் பாடுகள் இருந்தது. அவர் பாவமில்லாதவராயினும் பிறருடைய பாவத்தை சுமந்தார். ஏன் உன்னுடைய, என்னுடைய பாவத்தையும் சிலுவையில் சுமந்து தீர்த்தார். அவருடைய ஒவ்வொரு சொட்டு இரத்தமும் நம்முடைய பாவத்தை கழுவுகின்றது. அதனால் நம் பாவத்தை இனி நாம் சுமக்க தேவை இல்லை. 

நான் செய்த பாவத்தால் எனக்கு மகிழ்வே இல்லை என்று வருந்தாதே! நீ இயேசுவிடம் நம்பி வா! உன் பாவங்களை அவரிடம் சொல். அவ்வாறு சொல்வாயேயாகில் அவர் உன்னை கழுவுவர். உன் பாவத்தை நீக்குவார். 

வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். (மத்தேயு 11:28)

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார். உன் சுமையை அவர்மீது வை. அவர் உன்னை இளைப்பாற செய்வார். ஏன் தினம் தினம் நீ வருந்த வேண்டும். மனம்திரும்பி இயேசுவிடம் வா!. உலகம் உன்னை புறந்தள்ளினாலும் இயேசு உன்னை தள்ளமாட்டார். உன்னை அணைத்துக் கொள்வார்.


"அதுபோல நீங்களும் இப்பொழுது துக்கமடைந்திருக்கிறீர்கள் நான் மறுபடியும் உங்களைக் காண்பேன், அப்பொழுது உங்கள் இருதயம் சந்தோஷப்படும், உங்கள் சந்தோஷத்தை ஒருவனும் உங்களிடத்திலிருந்து எடுத்துப்போடமாட்டான்".  (யோவான் 16:22)

இது தான் இயேசுவை நீ ஏற்றுக் கொள்வதால் வரும் உண்மையான சந்தோஷம். அவர் நம்மை சந்திக்க மீண்டும் வருவார். அவருக்காய் காத்திருந்தால் நித்திய மகிழ்வை உனக்கும், எனக்கும் தருவார். 

"இவர்கள் இனி பசியடைவதுமில்லை, இனி தாகமடைவதுமில்லை, வெயிலாவது உஷ்ணமாவது இவர்கள்மேல் படுவதுமில்லை". (வெளிப்படுத்தினத விசேஷம் 7:16)

இறையரசில் நீ பெற்றிருக்கும் வாழ்வு நித்திய மகிழ்வை தரும். இந்த உலகை வெறுத்து, அவரை பின்பற்று அவர் உன்னை மீட்டுக் கொள்வார். நீ இயேசுவில் உண்மையாய் வாழ்வாயெனில் சந்தோஷமான நித்திய வாழ்வில் நாம் சந்திக்கலாம். ஆமென்.






Comments