Posts

Showing posts from August, 2025

நீங்க உண்மையான சந்தோஷத்தை பெற வேண்டுமா? இயேசுவை பின்பற்றுங்க சகோதர சகோதரிகளே

Image
அன்பு சகோதரனே சகோதரியே! நீ தேடும் சந்தோஷமான வாழ்வை இயேசுவால்  உனக்கு தர முடியும் என்பதை நீ விசுவாசிக்கிறாயா?  நான் இருக்கும் நெருக்கடியான சூழலில் உதவி செய்ய யாரும் இல்லை என்று நெருக்கடியில் சிக்கி உழன்றிருக்கிறாயா? நீ இயேசுவை விசுவாசி நீ சந்தோஷமடைவாய். "மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும், நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்". (யோவான் 16:20)  இது இயேசு தன் சீடர்களுக்கு கூறிய வார்த்தை. இது எப்படி சாத்தியம் என்று கேள்வி எழுப்புகிறாயா தேவ பிள்ளையே!. இயேசு கிறிஸ்து மரித்து அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாள் உயிருடன் எழுந்தார். விண்ணுலகிற்கு ஏறி பிதாவின் வலது புறத்தில் வீற்றிருக்கிறார்.  இது அவர் அனுபவித்த பாடுகளால் அவருக்கு பிதா கொடுத்த மகிமையான இடம். உலகில் வாழ்ந்த போது அவருக்கு அனேகம் பாடுகள் இருந்தது. அவர் பாவமில்லாதவராயினும் பிறருடைய பாவத்தை சுமந்தார். ஏன் உன்னுடைய, என்னுடைய பாவத்தையும் சிலுவையில் சுமந்து தீர்த்தார். அவருடைய ஒவ்வொரு சொட்டு இரத்தமும் நம்முடைய பாவத்தை கழுவுக...